Freitag, 20. April 2007

இன்ப ஊற்றுக்கள்

யாழ் சுதாகர்



http://www.youtube.com/watch?v=_VgdPBQZuok&feature=relatedadvanced

Poomalaiyil Oor Malligai
http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=29417






இன்ப ஊற்றுக்கள்



வணக்கம் யாழ் சுதாகர் அவர்களே.....



உங்கள் நிகழ்ச்சிகள் நெற்றில் இருக்கும் கவிதைகள் தொடக்கம் பாகவதர் முதல் கொண்ட தொகுப்புக்கள்..



வானொலி யில் தொகுத்து வழங்கும் 'நினைத்தாலே இனிக்கும்'

இரவு நிகழ்ச்சிகள் மிக மிக அருமையான வடிவம்.



நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சியின் வடிவம்.....நினைத்தாலே.. உள்ளம் இனிக்கின்றது.நேயர்களை கவரும் விதமாகவும் வித்தியாசங்களும் நிறைந்த வடிவமாக உள்ளது.

இசையின் ராகங்களின் தெரிவும் .கவியின் அழகும்.....

பாடியவர்களைப் பற்றி தெளிவாகச் சொல்லும் ஆற்றலும் மன நிறைவையும், தெரியாத பல விடயங்களை நாம் தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை உங்கள் தொகுப்புத் தோரணமும் தருகின்றது.



எனக்கு ஒரு சந்தேகம்... பல தடவை ஏற்படும்.உங்கள் நிகழ்ச்சியை கேட்கும் போது....திறமை உங்கள் கைக்கா.. இல்லை மனதுக்கா... என என்னை நானே.. கேட்பதுண்டு.



பாடல்களை அள்ளத் தெளிக்கும் போது தூக்கம் என்பதை மறந்து விடுகின்றோம்.....அந்த அளவுக்கு நல்ல பாடல் தெரிவு.நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டே என் சந்தேகத்துக்கு பதில் கிடைக்கும் என்னிடம் இருந்து.

எப்படியா..?

நீங்கள் இசையை தினம் தினம் அருந்திக்கொண்டு வாழ்பவர் போல் இருக்கின்றது.



இசையை ரசிக்கும் மனம் கொண்டவரால் தான் பாடல் தெரிவு இங்கே.. திறமையாக அமையும்இதில் மனது இசையை தேடுதா... இல்லை கை இசையை தேடுதா.. என்று பல தடவை நான் திண்டாடுவது.அப்போது தான் நிகழ்சியின் பட்டியலைப் பார்க்கும்போது...மனது இசையைத் தேடி அங்கே.. கையை வந்து சரணடைகின்றது.



மனதுக்கும் கைக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.3 வருட காலமாக தொடர்ந்து கேட்டுப் பதிவுகளும் செய்து வருகின்றேன்.இதில் பல தடவை சாதனைகளும் நிலை நாட்டியுள்ளீர்கள்.தொடர்ந்து பல மணி நேரம் நிகழ்ச்சி செய்துள்ளீர்கள்.

சென்ற வாரம் நினைத்தாலே.. இனிக்கும் நிகழ்ச்சி அருமையா.. இல்லை அற்புதமா.. அபாரமா..சொல்லத் தெரியவில்லை.எப்படிப் பாரட்டுவது என்று.8. 9 . 2006 சனிக்கிழமை இந்திய நேரம் 11 முதல் அதிகாலை 5 மணிவரை அதாவது 11 -12 வரை, பின் 1 --2 மணி.அதன் பின் 2 - 4 வரை அத்தனை நிகழ்ச்சியும் சொல்ல வார்த்தை வரவில்லை...பாடல் தெரிவும், கவிதையும் ஒரு கலக்கு கலக்கி விட்டீர்கள்.

வாழ்த்துக்கள்இதே.. போல் தான் உங்கள் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நன்றாக அமைந்து கொண்டு உள்ளது.6 .9.2006 வியாழன் அன்று சுசீலாவின் பாடல் தெரிவு சோகம் தந்த சுகமான ராகம்... அருமை.இதே போல் 12.9.2006. செவ்வாய்க்கிழமை ஜேசுதாசின் பாடல் தெரிவும் அருமை.இத்தனையும் இன்னும் மலரப்போகும் நிகழ்ச்சியும் இன்ப ஊற்றுக்கள் என்றே கூற முடியும்.நிகழ்ச்சிகள் யாவும் பதிவில் உள்ளன என்னிடம்...வாழ்க வளமுடன்.வளர்க புகழுடன்.





இசைக்கு வசமான
அன்புடன்...
ராகினி
ஜேர்மன்





எனக்குப் பிடித்த பழைய பாடல்களை எனது கவிதைகளுடன் கேட்க கீழ்வரும் இணைப்புகளை அழுத்துங்கள்... [NEW]



என்றும் இனியவை-1



என்றும் இனியவை-2



இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்





http://clearblogs.com/piriyaa/